Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
வாய்புண் குணமாக
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
நாக்கில் புண் ஆற
அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து குழுநீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3வேளை சாப்பிடலாம்.
வாய்புண், வயிற்றுபுண் நீங்க
மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.
வாய்ப்புண் ஆற
காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளிக்கலாம்.
வாய் உள்ரணம் குணமாக
தேங்காய்ப் பால் தினமும் கொப்பளித்து குடித்து வரலாம்.
வாய் வேக்காடு தீர
திருநீற்றுப்பச்சிலை மெல்லுவதால் குணமாகும்.
தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் குணமாக
மாஇலை, பச்சை இலை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க குணமாகும்.
வாய், நாக்கு புண்ணிற்கு
பப்பாளிப்பாலை தடவலாம்.
வாய்ப்புண்
ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் குணமாகும்.
வாய் கசப்பு
முருங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ணலாம்.
வாய்ப்புண், பல்வலி தீர
கொள்ளுக்காய் வேளை வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்கலாம்.
வாய்ப்புண் தீர
ரோஜா பூ கஷாயம் செய்து கொப்பளிக்க தீரும்.
நாக்கு புண் குணமாக
நெல்லி வேர்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண் குணமாகும்.
எலும்பு வலுப்பெற
கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலாத்தி பொடி கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிட வேண்டும்.
எலும்பு மஜ்ஜை பிரச்சனைகள் தீர
வைலட் எனும் அடர்ந்த நீலநிற ஒளி தீர்வு கொடுக்கும்.
நரம்பு கோளாறு நீங்க
வெள்ளறுகு சமூலம், மிளகு, சுக்கு. சீரகம் கஷாயம் 50மி.லி. காலை,மாலை குடிக்கலாம்.
வெண்குஷ்டம் தீர
சந்தனத்தை எலுமிச்சஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
வெண்குஷ்டம், சோகை தீர
ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து 1கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம்.
குஷ்டம் தீர
நன்னாரி வேர் பொடி வெண்ணையில் சாப்பிடவும்.
குஷ்டம் குணமாக
வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம் .
குஷ்டரோகம் குணமாக
சுத்தி இலையை தின்றால் குஷ்ட ரோகம், உட்சூடு, கை கால்களுக்கு உண்டாகிற கருமேகம் நீங்கும்.
குஷ்டரோகம் மட்டுப்பட
கோணிக்கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து பசும்பாலுடன் சாப்பிடவும்.
ஆரம்ப கட்ட குஷ்டம் குணமாக
வேர் சூரணம் நன்னாரியில் செய்து வெண்ணெய்யில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.
கிருமி ரணம், குட்டரோக புண்கள் தீர
புன்னை எண்ணையை பூசி வரவும்.
உடல் மெலிவு பெற
பப்பாளிக்காயைச் சமைத்து உண்ணலாம்.
ஊளைச்சதையை குறைக்க
அடிக்கடி சோம்புநீர் பருகலாம்.
உடல் எடை குறைய
அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வரலாம்.
தேவையற்ற கொழுப்பு குறைய
பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வரலாம்.
சதை போடுவதைத் தடுக்க
வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவைகள் எதை ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
தேகம்
சுரைக்காய் சமைத்து உண்டுவர தேகத்தைக் கரைத்து சமநிலைப்படுத்தும்.
தொப்பை குறைய
சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வரலாம்.
பருத்த உடல் மெலிய
மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வரவும்
உடல் வலிமை பெற
அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊழை சதை குறையும் உடல் வலிமை பெறும்.
எடை கூடாமல் தடுக்க
தேநீரில் எலுமிச்சம்பழசாறு கலந்து காலையில் குடித்து வர எடை கூடாமல் தடுக்கும்.
மிகு வியர்வை குணமாக
காக்கிரட்டான் இலைசாறு. இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம்.
துர்நீர் கழிய
நீர்முள்ளிவிதை நெருஞ்சில், வெள்ளரிவிதை சிதைத்து கஷாயம் சேர்த்து குடிக்க துர்நீர் கழியும்.
வாதநீர் வெளியேறி குத்தல் வலி குணமாக
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் விளக்கெண்ணையில் தாளித்து ரசம் சாப்பிட தீரும்.
வயிற்றுக்கடுப்பு குணமாக
காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும்
வயிற்றுக்கடுப்பு
மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க குணமாகும்.
வயிற்றுக்கடுப்பு நீங்க
அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் குணமாகும்.
வயிற்றுக்கடுப்பு, மூலரணம் தீர
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வரலாம்.
இரத்தக்கடுப்பு குணமாக
விளாம்பிசினுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க இரத்தக்கடுப்பு குணமாகும்.
வயிற்றுகடுப்பு குணமாக
தொட்டால் சுறுங்கி இலை சாறு தயிரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும்.
வயிற்று வலி, பித்தவெடிப்பு
மருதம் இலை அரைத்து 1கிராம் காலையில் சாப்பிட்டு வர தீரும்.
இரத்த பேதி, வயிற்றுகடுப்பு
மாந்தளிர் மாதுளை இலை அரைத்து 1கிராம் மோரில் குடிக்க தீரும்.
வயிற்று கோளாறு
புதினா துவையல் நல்லது.
வயிற்றுப்புண் குணமாக
அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7நாட்கள் சாப்பிட்டு வர நலமாகும் .
அல்சர் நோய் குணமாக
குடல் வெந்து ஓட்டை விழுவது தான் அல்சர் ஆகும். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.
இரத்த வாந்தி, வயிற்று வலி
வெங்காயம் உப்பை தொட்டு தின்ன தீரும்.
வயிற்று கடுப்பு. பெரும்பாடு
மாமரவேர் பட்டை சிதைத்து கஷாயம் 3 வேளை சாப்பிட்டு வர நீங்கும்.
குடல் புண் ஆற
வில்வபழம் பொடி செய்து கால்கிராம் சாப்பிட்டு வரலாம்.
வயிற்று உப்புசம் குணமாக
சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடிசெய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து பருகலாம்.
வயிற்று வலிக்கு
கசகசாவுடன் கருப்பட்டி மற்று 4கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.
வயிற்று வலி தீர
மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில்சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
வயிற்றுப் பொறுமல் குணமாக
வெற்றிலை.ஓமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருகலாம்.
வயிற்று நோய் குணமாக
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.
வயிற்றுபுண், தொண்டைபுண் குணமாக
தேங்காய்பால் கொப்பளித்து குடித்து வரலாம்.
வயிற்று புண் தீர
புளியம்பட்டை தூள் உப்பு சேர்த்து கஷாயம் குடிக்க வயிற்றுப்புண் தீரும்.
வயிற்று வலி தீர
கொன்றைபூ கஷாயம் குடிக்க குணமாகும்.
அம்மை நோய்க்கு
சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
அம்மை காய்ச்சல்
அகத்தி மரப்பட்டை வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம்.
அம்மை நோய் வராமல் தடுக்க
10கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவும் காலத்தில் தடுத்துக் கொள்ளலாம்.
அம்மைத் தழும்பு மாற
கருவேப்பிலை 1பிடி, கசகசா 1கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1துண்டு சேர்த்து முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் தழும்பு மறைந்து விடும்.
தாது பலப்பட
10கிராம் வில்வவேர்பட்டையை 1கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரவும்.
தாது இழப்பு தீர
சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.
தாது விருத்தியாக
முருங்கை இலை பொரியல் நெய்யுடன் 48நாட்கள் சாப்பிடவும்.
புத்திக்கூர்மை, தாதுவிருத்தி உடற்பொலிவு உண்டாக
கோரைக்கிழங்கு சூரணம் 1கிராம் காலை,மாலை தேனில் சாப்பிடவும்.
தாது பெருக
வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம்.
ஆண்மை பெருக
திப்பிலி பொடியை நெய்யுடன் சாப்பிடவும்.
ஆண்மை பெருக
பேரீச்சம்பழத்தை ஆட்டுபாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும்.
தாதுமிடுப்பு உண்டாக
வெடிக்காத தென்னம்பாளை பிஞ்சு பசும்பாலில் அரைத்து 2கிராம் தொடர்ந்து 48நாட்கள் சாப்பிட தாதுமிடுப்பு உண்டாகும்.
தாதுகட்ட
நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து காலை மாலை சாப்பிட்டு வர தாது கட்டும்.
தாதுபலம் உண்டாக
முருங்கைபிசினை பொடிசெய்து அரை கரண்டி பாலில் காலை, மாலை சாப்பிட தாதுபலம் உண்டாகும்.
தடைபட்ட மாதவிடாய்
வேலிபருத்தி வாதநாராயணன் பொடி சாப்பிட சரியாகும்.
காதுவலி குணமாக
மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
காது அடைப்பு, கட்டி
தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
காதில் ஈ புகுந்தால் வெளியேற
குப்பைமேனி சாறும், சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுகள் விட்டால் வெளியேறி விடும்.
காதுவலி
எலுமிச்சம்பழ சாறு 4துளி காதில் விடலாம்.
சீழ் வருதல் நிற்க
தைவேளை இலைசாறு 1துளி விடலாம்.
காது மந்தம்
திருநீற்றுப் பச்சிலையை வாட்டிப் பிழிந்த சாறு இரண்டொரு துளி காதில் விட குணமாகும்.
காது குத்தல் நிற்க
பெருங்காயத்தைப் பொறித்து தேங்காய் எண்ணெய்யில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இருதுளிகள்.. காதில் விடலாம்.
காதடைப்பு தீர
சிறுதேட் கொடுக்கு இலைசாறு நல்லெண்ணையில் சமஅளவு கலந்து காய்ச்சி காதில் 2சொட்டு விட தீரும்.
காது செவிடு சரியாக
கொன்றைவேர்பட்டை, முருங்கை வேர்பட்டையும் அரைத்து துணியில் பிழிந்து சாறு 2செட்டு காதில் விட காது செவிடு சரியாகும்.
காதில் கிருமி ஒழிய
ஆமணக்கு பூ சாறு, வசம்பு, மணத்தக்காளி இலைசாறு,வெள்ளைபூண்டு ஏதாவது ஒரு சாறு காதில் விட கிருமி ஒழியும்.